இடைவிடாது பெய்யும் கனமழை : ஸ்தம்பித்த குமரி… திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் பெரும் வெள்ளப்பெருக்கு..!!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 1:00 pm
thirparappu - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி 14 மணிநேரம் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாகவே விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தொடங்கிய மழை, தொடர்ந்து இன்று காலை 9 மணி வரை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்கமுடியாமல் தவித்தனர். குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பல இடங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிதவித்து வருகின்றனர். மேலும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலையோர கிராமங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து குளங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி மாறுகால்கள் உடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் சூறைக்காற்று வீசிவருதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதே மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தால் குமரி மாவட்டத்தில் பெரிதளவில் வெள்ள அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Views: - 566

0

0