பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. திரண்டு வந்த பக்தர்கள் : களைகட்டிய கோவை!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 11:12 am

கோவை அடுத்த பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 4 ம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் ஹோமம், புனித மண் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புனித தீர்த்தம் அழைத்தல் பரிவார மூர்த்திகள் கலசங்கள், யாகசாலைக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மங்கல இசை, விநாயகர் வழிபாடு முளைப்பாரி ஊர்வலம், பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி, பாலதண்டாயுதபாணி சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றது.

இதையும் படியுங்க: தொடர் உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

அதைத் தொடர்ந்து பிரதான கலசங்கள் மற்றும் யாகசாலையில் 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்பட்டது. இதில் 60 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று பன்னீர் திருமுறை விண்ணப்பம் செய்தனர்.

தொடர்ந்து தீபாரதனையோடு முதல் கால பூஜை முடிந்தது. அதனைத் தொடர்ந்து 4 ம் காலை யாக பூஜை நடந்தது. இதை அடுத்து குடமுழுக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று உள்ளனர்.

Perur Temple Kumbabishegam

கும்பாபிஷேகத்தை ஒட்டி 3 வேலையும் பக்தர்களுக்கு அன்னதானமும், வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர பேரூர் தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Perur Patteeshwarar

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வகையில் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?