தோழியுடன் கணவனுக்கு கள்ளக்காதல்… ரூட்டு போட்டுக் கொடுத்த மனைவி… குடும்பமே நடத்திய நாடகத்தால் பறிபோன உயிர்..!!

Author: Babu Lakshmanan
18 October 2021, 2:28 pm
kumbakonam murder - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணம் அருகே பெண்ணை நகை பணத்திற்காக கொன்று புதைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி செவ்வாய்க்கிழமை திருப்பனந்தாளில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் அனிதா பயன்படுத்திய செல்போனை ஐஎம்ஐ நம்பர் மூலம் போலீசார் பாபநாசத்தில் கைப்பற்றினர். அதில் அனிதா காணாமல் போன அன்று அவரிடம் கடைசியாக பேசிய நபரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர். அதன்படி அனிதா வீட்டின் எதிர்வீட்டில் வசித்து வரும் கார்த்திக் என்பவருடைய செல்போன் எண் என தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அனிதாவை கொலை செய்து சோழபுரத்தில் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர் புதைத்ததாக கூறிய இடத்திற்கு நேரில் சென்று அனிதாவின் உடலை தோண்டி எடுத்தனர். அதில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூட்டைக்குள் அடைத்து அவர் புதைத்திருப்பது தெரியவந்தது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் அனிதாவும், கார்த்தியின் மனைவி சத்தியாவும் சோழபுரத்தை சேர்ந்தவர்கள். மேலும், இருவரும் வகுப்புத் தோழிகள். இதனால் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்த இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில்இ அனிதாவிடம் அதிக பணம் நகை இருப்பதை அறிந்து அதனை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என கணவருடன் திட்டம் போட்ட சத்தியா, தனது கணவரை அனிதாவுடன் பழக வைத்து அவர்களுக்கு கள்ளத் தொடர்பை ஏற்படுத்தி, அதன்மூலம் அனிதாவை ஏமாற்றி அவரிடம் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர்.

இந்நிலையில் கொடுத்த பணம் நகைகளை அனிதா திருப்பிக் கேட்கவே, அவரை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 12ஆம் தேதி அனிதாவை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து, சோழபுரத்தில் உள்ள சத்தியாவின் வீட்டிற்குப் பின்புறம் இருந்த புதர் காட்டில் சாக்குமூட்டையில் அனிதாவை உடலை கட்டி குழி தோண்டி புதைத்து தெரியவந்தது. இதையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக திருப்பனந்தாள் போலீசார் கார்த்தி, அவரது தந்தை ரங்கநாதன், மைத்துனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

Views: - 618

0

0