52 ஆண்டுகளுக்கு நிரம்பிய குறிச்சி குளம்.. விவசாயிகள் டபுள் சந்தோஷம் : ஆட்சியர் ஆய்வு!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 9:58 pm
Kurichi
Quick Share

52 ஆண்டுகளுக்கு நிரம்பிய குறிச்சி குளம்.. விவசாயிகள் டபுள் சந்தோஷம் : ஆட்சியர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் அமைந்துள்ளது குறிச்சி குளம். 36 ஏக்கர் பரப்பளவில் இந்த குளம் அமைந்துள்ளது.

1972 ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக குறிச்சி குளம் நிரம்பியது. அதன் பிறகு சரியான அளவு மழைப்பொழிவு இல்லாததால் குளம் நிரம்பாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு அதிக அளவில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி 118.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதன் காரணமாக ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் தற்போது நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்‌ இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று குறிச்சி குளத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க: மணீஷ் சிசோடியா அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆதாரங்கள் இருக்கு.. ஜாமீன் வழக்கில் நீதிபதி ட்விஸ்ட்!

ஆய்வினைத் தொடர்ந்து தண்ணீரை முறையாக பயன்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Views: - 176

0

0