நடிகை குஷ்புவுக்கு பாஜகவில் துணைத் தலைவர் பதவி; கே டி ராகவனுக்கும் முக்கிய பதவி!
Author: Prasad30 July 2025, 5:27 pm
தமிழக பாஜகவில் முக்கிய பதவிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் பதவியளிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா புஷ்பா, பால் கனகராஜ், விபி துரைசாமி, கரு நாகராஜன் ஆகியோருக்கும் மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேடி ராகவனுக்கு மாநில பிரிவு அமைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக பொதுச்செயலாளர்களாக கேசவ விநாயகம், ராம ஸ்ரீனிவாசன், எம் முருகானந்தம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக பாஜகவின் துணை தலைவர்கள், பொது செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
