மருத்துவம் படித்துவிட்டு பிச்சையெடுத்த திருநங்கை: பெண் காவலரின் நெகிழவைத்த செயல்….!!

24 November 2020, 3:38 pm
doctor transgender - updatenews360
Quick Share

மதுரை: மருத்துவப்படிப்பு முடித்துவிட்டு ஆதரவற்று சுற்றிதிரிந்த திருநங்கையின் டாக்டர் கனவை காவல்துறையினர் நிறைவேற்றி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் மருத்துவம் படித்து முடிந்த திருநங்கை ஒருவர், சான்றிதழ் பெறுவதற்கு சிரமப்பட்டு, ஆதரிக்க யாருமின்றி பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து, சமூக வலைதளங்களில் செய்து வெளியானது.

இதுகுறித்து தமிழக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், மதுரை மாநகர் திலகர் திடல் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்தபோது தான் MBBS முடித்து உள்ளதாகவும், தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதுடன் சமுதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக திலகர் திடல் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களிடம் தனது நிலையை கூறி அழுதார்.

இதனையடுத்து, அவரது நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் மருத்துவ படிப்பதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று சரி பார்த்ததில் அவர் கூறிய தகவல் உண்மை என்பதை அறிந்து, உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து, மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இதனையடுத்து, தற்போது திருநங்கை அவர்கள் தனது பணியை தொடங்க இருக்கிறார். கூடிய விரைவில் திருநங்கை ஒருவர் டாக்டராக மதுரை மாநகரில் வலம் வர தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் என காவல்துறையின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0