லால்குடி தொகுதி காலி… உயிருடன் இருக்கும் திமுக எம்எல்ஏ மரணமடைந்ததாக பதிவிட்டதால் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2024, 10:32 am

“திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என எம்எம்ஏ செளந்திரபாண்டியன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம், திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் , பத்திரப்பதிவு கட்டிடம் அமைப்பதற்கான இடம் அரசு அதிகாரிகள் ,மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள் ,உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக ஆய்வு மேற்கொண்டது குறித்த புகைப்படங்க பதிவுச் செய்திருந்தார்.

அமைச்சர் கே என் நேருவின் பதிவிற்கு லால்குடி எம்எல்ஏ செளந்திரபாண்டியன், தன்னை எந்தவித அரசு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை மேலும் தனது தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் ,பத்திரபதிவு அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக இடங்களை ஆய்வு மேற்கொண்ட போது அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டு அதிரடித்துள்ளார்.

லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கடந்த நான்கு முறை எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார் கடந்த தேர்தல்களில் திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் திமுக எட்டு தொகுதிகளை இழந்த பொழுதும் இவர் மட்டுமே லால்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வதந்திகள் பரவி திமுகவினரிம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் கே என் நேரு மற்றும் சௌந்தரபாண்டியன் இருவரையும் நேரில் அழைத்து சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய முகநூல் பதிவு குறித்து திமுக வட்டாரங்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது இது முதல்வரின் பார்வைக்கு சென்று இதற்கான தீர்வு எட்டப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!