நெற்றிக்கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி : பழனி அருகே பரபரப்பு!!

7 November 2020, 2:12 pm
Goat - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் நகரைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.

அதில் ஒரு ஆட்டுக்குட்டிக்கு நெற்றியில் கண்கள் இருந்ததை கண்ட அழகம்மாள் ஆச்சரியம் அடைந்தார். இந்த அதிசய ஆட்டுக்குட்டியை காண அப்பகுதியினர் அங்கு கூடினர்.

இதனை காண வந்த பெரியோர்கள் ஆட்டுக்குட்டிக்கு நெற்றிக்கண் திறந்திருப்பது போல் பிறந்திருப்பதால் இது உலக அழிவிற்கு அறிகுறியாக இருப்பதுபோல் தெரிவதாக அச்சமடைந்தனர்.

Views: - 23

0

0