சாதிக்க மொழி தடையல்ல… கேரள மாநிலத்தில் சப் கலெக்டர் ஆன குமரி இளம் பெண்!!

4 July 2021, 4:44 pm
Sub Collector - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நடுத்தர குடும்ப வழக்கறிஞருரின் மூன்றாவது மகளாக பிறந்து ஐஏஎஸ் படித்து சாதித்த மாணவி, கேரளா மாநிலம்  கோழிக்கோடு மாவட்ட சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளமு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கரும்பாட்டூர் அடுத்த சோட்டபணிக்கன் தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். வக்கீலாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமயந்தி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர் இவரது குழந்தைகளை அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனத்துடன் செயல்பட்டார். இதனால் வரதராஜன் தனது வாழ்க்கையை தியாகம் செய்து குழந்தைகளின் படிப்பிற்காக செலவு செய்து வந்தார்.

இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் செல்சாசினி ஐஏஎஸ் படிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். மகளின் படிப்பிற்காக வரதராஜன் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் செல்சாசினி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மிசோரியில் நடந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியில்  இவர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை உள்பட உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 414

0

0