ஸ்கூலில் தமிழ், ஆங்கிலம் தான் படித்தேன்..! இந்தி படிக்கவில்லை…! கனிமொழி பேட்டி
12 August 2020, 8:22 pmசென்னை: பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் படித்தேன், இந்தி படிக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல கனிமொழி வந்தார். அப்போது பாதுகாப்பு சோதனையின் போது தம்மை இந்தி தெரியுமா? என்று பாதுகாப்பு பெண் அதிகாரி ஒருவர் கேட்டார். இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என்பது எப்போது மாறியது என்று தமக்கு தெரியவில்லை என்று கூறி இருந்தார்.
சமூக வலைதளங்களில் அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை அறிவித்தது. அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி, பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் படித்தேன், இந்தி படிக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியரா என்று தம்மிடம் கேள்வி கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. நான் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்.
எனக்கு இந்தி தெரியாது, இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொன்னது அவமானம். இப்போது தமக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பது விஷயம் அல்ல என்றும் கூறினார்.