மகளின் நிலை கண்டு மரணமடைந்த பழம்பெரும் நடிகை : காதலன் கைவிட்டதால் சினிமாவை ஒதுக்கி தனியாக வாழும் பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 4:27 pm
Actress Kanaga - Updatenews360
Quick Share

சினிமாவில் நடிப்பவர்களுக்கு பொருந்திப் போகும் பழமொழி என்றால் ஒன்றே ஒன்றுதான். அது காற்றுள்ள போதே தூற்றிக்கொள். சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதுதான் புத்திசாலித்தனம். தனக்கு இந்த வாய்ப்புதான் வேண்டும் என காத்திருந்த நடிகர் நடிகைகள் காணாமல் போனதுண்டு.

ஆனால் காதலன் பிரிந்ததால் சினிமாவில் இருந்து ஓரங்கப்பட்ட பட்ட ஒரே ஒரு நடிகை என்றால் அது பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகாதான். முகம், பாவனை, நடிப்பு என அசத்தியவர் பழம்பெரும் நடிகை தேவிகா. ஒரு காட்சியில் நடிக்கும் போதே தனக்கு பிடித்திருந்தால் மட்டும்தான் அந்த காட்சியை ஓகே செய்வாராம் தேவிகா.

Devika ~ Complete Information [ Wiki | Photos | Videos ]

எண்ணற்ற படங்களில் நடித்து, கவர்ச்சி காட்டாமல் கடைசி வரை சினிமாவில் நடித்த நடிகைகளில் தேவிகாவுக்கு முக்கிய பங்குண்டு. சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்த தேவதாஸ் என்பவரை மணம் முடித்தார்.

இந்த தம்பதிக்கு 1973ம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைதான் கனகா. தேவிகாவின் சொத்து, தாத்தா சொத்து என செல்வந்தராகவே கனகா வளர்ந்தார். சொந்த தயாரிப்பில் படமெடுக்க ஆசைப்பட்ட தேவிகா, கங்கை அமரனை அணுகியுள்ளார்.

Karagattakaran to get a sequel after 30 years - DTNext.in

ஆனால் அவரோ, தேவிகாவின் மகளை பார்த்து எதுக்கு சொந்தமாக படமெடுக்க வேண்டும், கனகாவை கதாநாயகி ஆக்குகிறேன் என கூறி, கரகாட்டக்காரன் படத்தை எடுத்தார். படம் பட்டிதொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்தது. முதல் படமே 300 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது.

Senthil: Celebrating 30 Years Of Karagattakaran | Tamil Movie News - Times  of India

பின்னர் ஏராளமான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த கனகா, மார்க்கெட் உச்சத்தில் இருந்த போதே, ஒருவரை தீவிரமாக காதலித்தார். அவரும் கனகாவுடன் உல்லாசம் அனுபவித்து உறவு கொண்டு வந்தார்.

Cancer Or Mental Illness? What Happened To Actress Kanaka? | Astro Ulagam

ஆனால் சொல்லாமல் கொல்லாமல் எங்கு சென்றார் என தெரியாததால் கனகா மனஉளைச்சலுக்கு ஆளானார். சினிமா வாய்ப்புகளை தேடி சென்றும் கதவை அடைத்த கனகா வீட்டிலேயே இருந்தார், வெளியே வராததால் அவரை பற்றி வீண் வதந்திகளெல்லாம் வந்தது. தந்தையுடன் சொத்து தகராறு, கேன்சர் என எண்ணற்ற வதந்திகளும் வந்தது. கனகாவின் நிலையை கண்டு தேவிகா கடந்த 2002ம் வருடம் காலமானார்.

கனகாவின் காதலன் யார் என்பதையும் வெளிகாட்டாமல் இருந்த கனகா, சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். காதலனால் சினிமாவை விட்டு விலகிய ஒரே ஒரு நடிகை என்றால் அது கனகா என்று அண்மையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Views: - 1471

0

0