தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: வாக்குறுதியை நம்பி நகையை அடமானம் வைத்த மக்கள்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Author: Udhayakumar Raman
22 September 2021, 9:47 pm
Quick Share

சேலம்: 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

வரும் மாதம் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. அவ்வகையில் அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அதிமுக நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:- டெல்லியில் ஆயிரம் உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

கூட்டுறவு சங்க முறைகேடு எனக் கூறப்படும் வேளையில் எந்த கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து அரசிடம் தெளிவான பதில் இல்லை. அதிமுக நீட் தேர்வு விலக்குக்காக. கொண்டு வந்த தீர்மானத்தையே திமுகவும் கொண்டு வந்துள்ளது. அதைப் போல் அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் திமுகவும் அதையே பின்பற்றுகிறது. 9 மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம். திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Views: - 306

0

0