கல்குவாரியில் பதுங்கிய சிறுத்தை : பிடிக்க முடியாமல் திணறும் வனத்துறை.. பீதியில் விவசாயிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 3:57 pm
Sathy Leopard -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கல்குவாரியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக அங்குள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை 20க்கும் மேற்பட்ட ஆடுகளும், 30க்கும் மேற்பட்ட காவல் நாய்களையும் சிறுத்தை தாக்கி கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும், வாடிக்கையாகி விட்டது.

தொடர்ந்து இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வருவதாலும், சிறுத்தை கல்குவாரியில் பதுங்கிகொள்வதால், சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் சூசைபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இன்று இரவு சிறுத்தை நடமாடியதை, அப்பகுதி விவசாயிகள் பார்த்து சிறுத்தை கல்குவாரியில் குதித்து ஓடுவதை வீடியோ எடுத்துள்ளனர்.

இதுபற்றி அருகில் இருந்த விவசாயிகளுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போக்கு காட்டி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 241

0

0