தமிழகத்தில் 800க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம் என்ன..?

Author: kavin kumar
17 November 2021, 9:41 pm
Cbe Corona -Updatenews360
Quick Share

தமிழகத்தில் புதிதாக 782 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய பாதிப்பான 789-ஐ விட குறைவாகும். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 907 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 71 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 211 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 281

0

0