எங்களுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை… எம்ஜிஆர் வளர்த்த கட்சி எங்கே உள்ளது என விஜய் தேடி பார்க்கட்டும்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2025, 10:53 am

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்: ப்ரோவாக இருந்தாலும் அங்கிலாக இருந்தாலும் நோ கமெண்ட்ஸ் தான். எங்களைப் பொறுத்தவரை தவெக பாஜகவின் சி டீம் என்று சொல்லிவிட்டோம். அதனால் அவர்களைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

பாஜகவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் செய்வது அவர்களுக்குள் இருக்கும் புரிதல்தான். எம்ஜிஆர் வளர்த்த அதிமுக யாரிடம் இருக்கிறது என்று விஜயே தேடிப் பார்த்து சொல்லட்டும்.

எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் நடக்கும் பகுதியில் திமுக ஆம்புலன்ஸ் விடுகிறது என்று அவர் கற்பனையாக சொல்லும் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆம்புலன்ஸில் ஆட்கள் ஏற்றி செல்வதை அங்கு உள்ள பொதுமக்கள் பார்த்திருப்பார்கள். அதில் ஏமாற்றுவதற்கு வழியில்லை.

ஆம்புலன்ஸை விட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடும் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது.

எடப்பாடி பழனிச்சாமியை வருகின்ற தேர்தலில் எதிர்க்கட்சியாகவே நினைக்கவில்லை. அவர்கள் எந்த கூட்டணியோடு வந்தாலும் எங்களைப் பொருத்தவரை திமுக கூட்டணி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

நாங்கள் வீடு வீடாக சென்று மக்களுடைய நாடியை பார்த்திருக்கின்றோம். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரு ஆறு மாதம் எட்டு மாதம் முன்னரே வாக்காளரை சந்தித்து அவர்களுடைய நாடியை பிடித்து பார்த்த கட்சி கிடையாது. அந்தக் கட்சி திமுக மட்டும் தான்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான். அவர் மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இவர் தான் வேண்டும் இவரது ஆட்சி தான் வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள்.

நாங்கள் என்னென்ன செய்துள்ளோம் என்பதை மக்களிடம் சென்று சொல்ல வேண்டும். அதை சொல்வதற்கு மக்களை சந்திப்பது அவசியம். மக்களை சென்று சந்தித்தால்தான் நாங்கள் செய்ததை சொல்ல முடியும். அவர்களும் புரிந்து கொள்ள முடியும். அதற்காக மக்களை சென்று சந்திக்கின்றோம் அது தவறு கிடையாது.

தேர்தல் களத்தில் எத்தனையோ எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் நிற்கின்றன. எங்களைப் பொறுத்தவரை திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் படைத்த எதிர்க்கட்சி கிடையாது. ஆனால் நிறைய எதிர்க்கட்சிகள் இருக்கிறது.

திமுகவை ஒழிக்க எங்களால் மட்டும் தான் முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி வசனம் பேசுவதற்கு வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். அந்த வசனம் தேர்தலிலோ மக்கள் மத்தியிலோ எடுபடாது.

30 நாள் சிறையில் இருந்தால் பதவி இழப்பு சட்ட மசோதா குழுவுக்கு சென்றுள்ளது இந்த சட்ட மசோதா வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக நசுக்குவதற்காக அவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பிடுங்குவதற்காக மறைமுகமாக எடுப்பதற்காக இது மாதிரியான சட்டங்கள் அவர்கள் கொண்டு வர முயற்சிக்கலாம்.

இந்த முயற்சிகள் எல்லாம் நீதிமன்றம் மூலமாகவும் அதேபோல பாராளுமன்றத்தின் மூலமாகவும் தடுத்து நிறுத்தப்படும். எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் திமுகவின் கூட்டணி வெற்றி மிக எளிதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!