ICMR அறிவுரையை சரியாக பின்பற்றாததால் நான்கு வயது பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…!

25 March 2020, 9:49 pm
Quick Share

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசெர்ச் ஒரு தனிப்படை அமைத்து இதற்கான மருந்தினை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளனர். ICMRரின் அறிவுரைக்கேற்ப ஐந்து முக்கியமான விதிகளை மக்கள் கடைப்பிடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.


அதிலொன்று
மிகவும் மோசமான நிலையை அடைந்த கொரோனா நோயாளிகளுக்கு இனிமேல் Prophylactic தெரபியை அளிக்கலாம். Hydroxy-Chloroquine என்னும் மருந்தையும் பரிந்துரைத்தது. ஆனால் இந்த மருந்தை யார்வேனாலும் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் கோவை மாவட்டம் சரவணப்பட்டியில் வாழும் ஒரு குடும்பம் இதை மெத்தனமாக எடுத்திருக்கிறது.


இந்த மருந்தினை கொரோனா அறிகுறிகளை கொண்ட ஒரு நான்கு வயது சிறுமிக்கு எந்த விதமான மருத்துவ ஆலோசனையுமின்றி அக்குழந்தையின் பெற்றோர்கள் கொடுத்துள்ளதால் அக்குழந்தையின் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றது. அச்சிறுமியின் உயிர் மிகவும் கவலைக்கிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.