கர்நாடக முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் : தமிழ் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்!!

Author: Udayachandran
8 October 2020, 2:23 pm
TN Cm Letter - Updatenews360
Quick Share

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழக முதலமைச்சர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகிளல் தமிழ் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் தற்போது அப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழக முதலமைச்சர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், கர்நாடக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டுமெனவும், புதிய தமிழ் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Views: - 58

0

0