உயிரைக் குடிக்கும் மர்ம ஏரி : தடையை மீறி படகு சவாரி சென்ற இருவர் உயிரிழந்ததால் பதற்றம்…

Author: kavin kumar
23 February 2022, 5:02 pm

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலாவிற்காக வந்திருந்த அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த கதிரவன், செல்வராஜ் இருவரும் பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற போது
கடலும் எரியும் இணையும் முகத்துவாரம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் இருவரையும் மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை உடல்களை அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழவேற்காடு சுற்றுலா பகுதியில் படகு சவாரி தடை செய்யப்பட்ட நிலையில், அடிக்கடி இதுபோன்று படகில் சட்டவிரோதமாக பயணம் செய்து முகத்துவாரம் பகுதியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் காவல்துறை உயிரிழப்புகளை தடுக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!