சினிமா பாணியில் நடந்த சம்பவம்.. போலீசாரை நம்ப வைத்து சிறையில் இருந்து தப்பிய ஆயுள்தண்டனை கைதி… காவலரை சஸ்பெண்ட் செய்து அதிரடி

Author: Babu Lakshmanan
17 June 2022, 4:11 pm

மதுரை : அரசரடி பகுதியில் மதுரை சிறையில் இருந்து ஆயுள்கைதி தப்பியோடிய நிலையில், காவலரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த ஆதி என்ற அருண்குமாா் (49). இவா் ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2021 அக்டோபா் 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதையடுத்து, மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமாா், அங்கு தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். இதில் சிறை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றதால் சிறையின் வெளிப்புறம் உள்ள பகுதிகளில் அருண்குமாரை தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில், நேற்று சிறையின் வெளிப்புற வளாகத்தில் உள்ள தோட்டத்தில் அருண்குமாா் வேலை பாா்த்துகொண்டிருந்தபோது, திடீரென அருண்குமாா் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானாா்.

இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடா்பாக சிறைக்காவலா் பழனிகுமாா் மீது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?