தந்தையைக் கொன்ற மகன்..! ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்..!

10 July 2021, 6:53 pm
Chennai HC -Updatenews360
Quick Share

சென்னை: சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் தளவாய் பாளையம் கிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி கடந்த 2012ஆம் ஆண்டு தனது மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்த மயில்சாமிக்கும் அவரது மகன் கனகராஜூக்கும் தகராறு ஏற்பட்டது. குடித்துவிட்டு அடிக்கடி வந்து சண்டை போட்டதால் ஆத்திரமடைந்த மயில்சாமி தன் சொத்துக்களை தரமாட்டேன் என கூறியதால், ஆத்திரமடைந்த கனகராஜ் மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனகராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கனகராஜ் மேல்முறையீடு செய்தார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பின்வாங்கியதால் அவரது தண்டனையை குறைக்குமாறு கனகராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் நேரில் பார்த்த சாட்சியங்கள் பின்வாங்கி இருந்தாலும் கனகராஜ் மனைவியும் மாமனாரும் சம்பவத்தை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் அதன் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Views: - 89

0

0