கஞ்சா போதையில் மலை மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் : ரூ.500 செலவுக்கு தருவதாக போலீஸார் கூறியதால் மனம் மாறிய நிகழ்வு..!

Author: Babu Lakshmanan
18 January 2022, 6:30 pm
karur suicide attempt - updatenews360
Quick Share

கரூரில் காவல் நிலையம் அருகிலேயே மது மற்றும் கஞ்சா போதையில் தாந்தோன்றிமலை கோயில் மலை மீது ஏறி தற்கொலை மிரட்டல் விட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை குறிஞ்சி நகரில் வசிப்பவர் ராஜா. இவரது இளைய மகன் ரஞ்சித் (21). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவில் மது போதையில் இருந்த ரஞ்சித், அருகில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி மலைக் கோவிலின் கோபுர உச்சிக்கு ஏறிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுப்பதாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், ரஞ்சித்தின் உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அப்போது, ரஞ்சித்திடம் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவனின் தந்தை ராஜா கள்ளக் குறிச்சியை சார்ந்த மணிகண்டன் என்பவரிடம் கடனாக பணம் பெற்றதாகவும், அந்த கடனை அடைக்க ரஞ்சித்தை வேலைக்கு அனுபியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு கரூர் வந்த இளைஞர் திரும்ப வேலைக்கு போக மாட்டேன் என வீட்டில் பிரச்சினை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி மலைக்கோயில் கோபுரத்தின் உள் பகுதியில் போலீசார் பாதி தூரம் ஏறி அவரிடம் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 500 ரூபாய் செலவுக்கு தருகிறேன் என கேட்டுக் கொண்டதால் தானாக கீழே இறங்கி வந்தான். அவனை தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பதால் காவல் நிலையத்தில் வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், இளைஞரின் சித்தப்பாவிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய இளைஞனை அவனின் உறவினர்கள் அடித்து இழுத்துச் சென்றனர்.

ஆனால், இளைஞன் அவர்களுடன் செல்ல மறுத்து தகராறில் ஈடுபட்டான். இளைஞனின் கையை கயிற்றால் கட்டி இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அழைத்த சென்றனர். இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீடியோ எடுத்த செய்தியாளர்களை போலீசாரின் முன்னிலையிலேயே இளைஞனின் அண்ணன் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வீடியோ எடுத்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சியும் ஈடுபட்ட மது மற்றும் கஞ்சா போதை ஆசாமி ரஞ்சித் என்பவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா? கரூர் மாவட்ட காவல்துறை., ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 324

0

0