தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் விலை உயர்வு : இன்று முதல் அமல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2021, 11:24 am
Alcohol Rate -Updatenews360
Quick Share

தமிழகத்தில் டாஸ்மூலம் விற்பனை செய்யப்படும் வவெளிநாட்டு மதுனாங்கள் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையில் மது விற்பனை நேரம் பொதுவாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்து வந்த நிலையில், கொரோனா காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது வெளிநாட்டு மதுபானங்களான ஜானி வாக்கர், பெய்லி ஐரீஷ், ஜெ & பி விஸ்கி உள்ளிட்ட மது வகைகளின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

அதன்படி, குறைந்த ரக மதுபானங்கள் விலையில் 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் 300 ரூபாயும் உயர்ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை இன்று முதல் அமலுக்கு வந்தது.

Views: - 330

0

0