கூடுதல் விலைக்கு மது விற்பனை : டாஸ்மாக் பணியாளர்கள் 14 பேர் அதிரடி நீக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 5:16 pm
Tasmac Suspend -updatenews360
Quick Share

அரியலூர் : கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்ற 14 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தல், மொத்த விற்பனை செய்தல், ரொக்க இருப்பு குறைவு மற்றும் அதிகம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 14 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யபட்டு உள்ளனர்.

அதன்படி வாரியங்காவல் கடையில் பணிபுரிந்த பாலமுருகன், விற்பனையாளர் சிவக்குமார், வரதராஜன்பேட்டை கடையில் பணிபுரிந்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள், செல்வகுமார், இரவீந்திரன், பழனிவேல் ஆகியோர் மொத்த விற்பனை செய்தற்காக பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனர்.

மேலும் ஆண்டிமடம் கடையில் பணிபுரிந்த மேற்பார்வையாளர் பழனிவேல், விற்பனையாளர்கள் சண்முகவேல், பிறைச்செல்வன் ஆகியோரை ரொக்க பணம் கூடுதலாக இருந்த குற்றத்திற்காகவும், அரியலூர் கடையில் பணிபுரிந்த மேற்பார்வையாளர்கள் ராஜகோபால், சாமிநாதன் மற்றும் விற்பனையாளர்கள் கருணாநிதி, அக்பர்கான், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோரை ரொக்க பணம் குறைவாக இருந்த குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.

Views: - 499

0

0