கூலித் தொழிலாளர்களை குறி வைத்து அமோக மது விற்பனை.. முன் வாசலை மூடி பின் வாசலில் ஜோர் : மதுப்பிரியர்கள் அவதி… !!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 10:42 pm

வேலூர் : அதிக விலைக்கு விற்கும் போலி டாஸ்மாக் கடையால் மதுப்பிரியர்கள் அவதியடைந்து வரும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கூட்டு சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இங்கு குடிமகன்கள் கூட்டம் எப்போதும் அலைமோதியபடி காணப்படும்.

அப்படிபட்ட இடத்தில் கடை நேரம் முடித்தவுடன் மறுநாள் காலை திறக்கும் வரை (இரவு 10 மணி முதல் மறுநாள் 12 மணிவரை) டாஸ்மாக் கடைக்கு நிகராக இரவு முதல் காலை வரை தடையில்லாமல் இயங்கும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு அதிக விலை மதுபானம் முதல் குறைந்த விலை மதுபானம் குளிர்ந்த பீர் வகைகள் என தங்கு தடையின்றி கிடைக்கின்றது,

இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறும்போது இங்கு நாள்தோறும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

இதில் தினக்கூலித் தொழிலாளர்களையும், கட்டிட தொழிலாளர்கள் உழைத்து உடல் வலியால் குடிக்கும் இவர்களை குறி வைத்துதான் இந்த கடை துவங்கியுள்ளது என்றும் ஏனென்றால் குறைந்த விலை மது பாட்டில்களை மட்டுமே வாங்கும் இவர்கள் அதிக விலையுள்ள வேறு பிராண்டு சரக்கை வாங்கி அருந்த மாட்டார்கள்.

ஆகவே இதில் விலை ஏற்றி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அந்த வகை மதுபாட்டில் மட்டும் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

பல்வேறு குற்ற செயல்களை போதை பொருள் தான் முக்கிய காரணியாக இருக்கின்றது அது போன்ற சம்பவம் நடை பெறுவதற்குள் முற்று புள்ளி வைக்க வேண்டும்.

திரைப்படப் பாடலில் வருவது போல ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் என்ற பாடலுக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடை மூடினாலும் கூட அதற்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கை கட்டி கண்மூடி வேடிக்கை பார்ப்பது தான் மிகவும் வருத்தம். எனவே வேலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!