”நோ பார்க்கிங்”-ல் வாகனத்தை நிறுத்தினால் “பூட்டு“ : கோவை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2021, 2:14 pm
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோ பார்கிங் பலகை முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை சங்கிலியால் பூட்டு போட்ட மாவட்ட நிர்வாகம்
தமிழகத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வண்டியை நிறுத்தினால் இது வரை கொடுத்து வந்த தொகையைவிட மிக அதிகமான தொகையை அபராதமாக கட்ட வேண்டும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது சொந்த பணிகளுக்காக வரும் மக்கள் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு அலுவலக வாகனங்களுக்கு இடையூராகவும் இருந்து வந்துள்ளது.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் குறிப்பிட்ட இடங்களில் நோ பார்க்கிங் பலகை மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளது. இதனைடையே மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று மக்களின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
இதனால் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் அதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனங்களுக்கு சங்கிலியால் பூட்டு போடப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0
0