ஸ்டாலின் ஆட்சியில் லாக்கப் மரணம் குவாட்டர் செஞ்சுரி போட்டுள்ளது : ஹெச் ராஜா விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2025, 4:51 pm

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய காவலர் அஜித் குமார், 10 பவுன் நகை திருடு போன வழக்கில் காவல்துறையின் விசாரணையின் போது உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திருப்புவனம் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆறு பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்ற அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: தோல்வி பயத்தால் திமுகவினர் பைத்தியம் பிடித்து திரிகின்றனர் : எல்.முருகன் காட்டம்!

பின்னர் செய்தியாளரை சந்தித்தபோது, காவல்துறையினர் அத்துமீறியதால் அஜித்குமார் மரணமடைந்ததாக குற்றம் சாட்டினர். மேலும் உயிரிழந்த 24 மணி நேரத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்படவில்லை.

ஸ்டாலின் ஆட்சியில் லாக்கப் டெத் குவாட்டர் செஞ்சுரி போட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், இன்று அஜித்குமார் இறப்பிற்கு ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காவல்துறை கொலை துறையாக மாறி உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆறு காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

அஜித்குமார் மரணத்திற்கு ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எச். ராஜா தெரிவித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply