தறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு

Author: Babu
28 July 2021, 1:04 pm
karur protest -updatenews360
Quick Share

அதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் மணவாசி அருகேயுள்ள கோரகுத்தியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 18 வயதான இவர் கரூரில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று கோரகுத்தியிலிருந்து மணவாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்தியி லாரியும் வந்த வேகத்தில் நிற்காமல் சென்றுவிட்டது.

லாரி மோதியதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலையே கார்த்திகேயன் உயிரிழந்தார். கார்த்திகேயன் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை லாரி ஓட்டுனரை கைது செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த கார்த்தியின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கரூர் திருச்சி சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி இன்னும் இரண்டு தினங்களில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிடப்பட்டது

Views: - 223

0

0