திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2025, 5:58 pm

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அங்கு மண கோலத்தில் வந்த இளம் ஜோடி மலர் மாலை மாற்றிக் கொண்டு இளம் பெண் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போது சினிமா பாணியில் பெண் வீட்டார் மற்றும் வாலிபர் குடும்பத்தினர் அங்கு வந்தனர்.

மண கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, எங்களது மகளை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்ய பார்ப்பதாக கூச்சலிட்டனர்.

அங்கிருந்து மணக் கோலத்தில் இருந்த பெண்ணை கட்டாயமாக அழைத்துச் செல்ல பார்த்தபோது வாலிபரின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

ஒருபுறம் இரு வீட்டார் வாக்குவாதத்தில் இருந்த போதே திடீரென்று கேப்பை பார்த்து இளம் பெண் கழுத்தில் வாலிபர் தாலி கட்டியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியின்றி கோயில் சன்னதியில் திருமணம் தொடர்பாக கோயில் அலுவலர் தகவலின் பேரில் போலீசார் இருவரையும் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பொதட்டூட்பேட்டை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி(21), பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா(19) இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், அவர்கள் காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவித்தனர். இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.

Love Marriage at Thirutani Murugan Templ

அனுமதி இல்லாத காதல் ஜோடி திருமணங்கள் மலைக்கோவிலில் அனுமதி இன்றி நடத்தக்கூடாது என்ற விதியை மீறிய காதல் ஜோடிகள் திருமணம் மீது நடவடிக்கை எடுக்காமல் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் மன்னித்து அனுப்பி உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?
  • Leave a Reply