அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம் : அதற்குள் கல்லூரி மாணவி எடுத்த முடிவு!!

11 September 2020, 7:04 pm
Pondy Suicide - updatenews360
Quick Share

புதுச்சேரி : காதலன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தட்டாஞ்சாவடி விவிபி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி(வயது 20) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சரவணனின் பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வருகிற 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்யாணத்திற்காக ஏற்பாடுகளை சரவணன் செய்து வந்த நிலையில், திடீரென இன்று கல்லூரி மாணவி காயத்திரி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காயத்ரி தற்கொலை செய்த சம்பவம் குறித்து தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதற்கட்ட விசாரணையில் காதலனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மணம் உடைந்த காய்திரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியது..

Views: - 0

0

0