கோவையில் குறைந்த கொரோனா : நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!!

20 November 2020, 6:38 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 779ஆக குறைந்துள்ளது

சுகாதாரத் துறையினர் இன்று வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 147 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 219ஆக உயர்ந்துள்ளது.

தவிர மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 142 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 45 ஆயிரத்து 845 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 779 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 0

0

0