மு.க. ஸ்டாலின் எப்போ முதலமைச்சரா பதவியேற்றாரோ அப்பவே எல்லாமே… ஆர்.பி. உதயகுமார் பேச்சால் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 2:31 pm

மு.க. ஸ்டாலின் எப்போ முதலமைச்சரா பதவியேற்றாரோ அப்பவே எல்லாமே… ஆர்.பி. உதயகுமார் பேச்சால் சலசலப்பு!!

மதுரை மாவட்டத்தில் வருகிற 20ம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்;- ஒபிஎஸ் தொல்லை தாங்கமுடியவில்லை நீதிமன்றம் என எங்கு சென்றாலும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை என ஓபிஎஸ்சை விமர்சித்தார்.

இங்கு வந்து இருக்க கூடிய கூட்டத்தை பார்த்தால் தேனியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி நடத்தும் கூட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட ஆச்சிரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.

நாளை தேர்தல் வைத்தாலும் எடப்பாடி தான் முதல்வராக வருவார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று எந்த நேரத்தில் முதலமைச்சர் பதவி ஏற்றாரோ எல்லாம் விலைவாசி உயர்வு ஏறிவிட்டது மக்கள் வீட்டில் தக்காளி சட்டினி கூட வைக்க முடியாது சூழல் ஏற்பட்டது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!