மீண்டும் சர்ச்சையான சிம்புவின் மாநாடு… பின்னணியில் ஆளும் கட்சியா…? ரசிகர்கள் அதிருப்தி…

Author: Mari
28 December 2021, 2:12 pm
Quick Share

நடிகர் சிம்புவின் சினிமா கெரியரில் மிகவும் முக்கியமான படமாக மாறியுள்ளது மாநாடு திரைப்படம்… ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் திரைக்கதை மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.சென்னையில், சமீபத்தில் நடந்த மாநாடு திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாததது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது.

சிம்புவின் இந்தச் செயலை பலரும் கண்டித்தனர். அதே மேடையிலேயே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என சிம்புவை தாக்கிப்பேசினார்.இதனிடையே பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான மாநாடு திரைப்படத்தில், தற்போது, தமிழக அரசியலில் நிலவும் சூழ்நிலையை போறப்போக்கில் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் வெங்கட்பிரபு.

தற்போது அப்படி ஒரு காட்சியில், ஒரு வசனம் mute செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சராக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரிடம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவருடைய குடும்ப அரசியலைப் பேசுவார். அதில், ‘ என்னைய கட்சி நடத்துறீங்க… முதல்ல உன்ன தலைவன்னு சொல்லச் சொன்னீங்க, அப்புறம் உன் புள்ளைய தலைவன்னு சொல்லச் சொன்னீங்க, அதுக்கு அப்புறம் அவ புள்ளயை தலைவன்னு சொல்லச் சொல்வீங்க…என்னையா விளையாடுறீங்க, வாழ்க்கப்பூரா உங்க குடும்பத்துலையே தலைவன்னு சொல்லிட்டு இருந்தா நாங்க எப்பய்யா தலைவனா ஆகுறது.  காலம்பூரா உங்க குடும்பத்துக்கே கொடி பிடிச்சு கும்புடு போட்டுகிட்டே இருக்கனுமாக்கும்..ஏன் எங்களுக்கெல்லாம் பதவிஆச வரக்கூடாதா..? என தமிழகத்தின் இன்றைய அரசியல், அதிகார கட்சிகளின் நிலைமையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் பேசி இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இதில் வாரிசு அரசியல் தொடர்பான வசனங்கள் ஓடிடி தளத்தில் mute செய்யப்பட்டுள்ளது. இது, ‘அரசியல் அதிகார வர்க்கத்தை காட்டுவதாகவே உள்ளது’ ‘படத்த படமாக பாருங்கய்யா’ என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 290

2

0