ஜாமீனில் வெளியே வந்தார் சாட்டை துரைமுருகன் : ‘இனிமேல தான் ஆட்டத்த பாக்கப்போறீங்க…’ என பேட்டி..!!

Author: kavin kumar
8 August 2021, 12:03 am
Quick Share

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சாட்டை முருகன் ஜாமீனில் வெளியே வந்தார்.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த சாட்டை துரைமுருகன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் யூடியூப் வலைத்தளத்தில் முழுநேரம் ஈடுபாடு காட்டி பிரபலம் ஆனார்.அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நடப்புகளை விமர்சித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதில் சில வீடியோக்களால் சர்ச்சை எழுந்தது. இதனால் எழுந்த புகாரினால் திருச்சி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் சாட்டைதுரைமுருகனை கைது செய்தனர்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருவிடைமருந்தூர் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகரின் புகாரின் பேரில் திருப்பனந்தாள் போலீசாரும் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் துரைமுருகன்.

நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. இதன்பின்னர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று ஜாமீனில் வெளியான சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஜாமீனில் வெளியே வர உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், சிறையில் அடைத்தால் என்னுடைய பேச்சையோ, எழுத்தையோ, கருத்தையோ முடக்க விட முடியது என்றும், அநீதிகளுக்கு எதிரான, அடக்குமுறைகளுக்கு எதிரான, தீண்டாமைகளுக்கு எதிரான, சாதிய இழிவுகளுக்கு எதிரான சாட்டை முன்பை விட பல மடங்கு வேகமாக அறிவு தளத்தில் இயங்கும் என்றும, இந்த சிறை வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கனிமொழி, திமுக தோழர்கள் மற்றும் வழக்கு தெடர்ந்தவர்களுக்கும் நன்றி கடமைப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Views: - 392

0

0