புதிய வாழ்விடத்தை நோக்கி மகிழ்ச்சி பயணம்… சத்தியமங்கலத்தில் தாவி ஓடும் மதுக்கரை சிறுத்தை!! (வீடியோ)

30 January 2021, 5:46 pm
cheetah - updatenews360
Quick Share

கோவை : கோவை மதுக்கரை பகுதியில் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கடந்த 21ம் தேதி நள்ளிரவில் கோவை மாவட்டம் மதுக்கரையை அருகே உள்ள குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று, அங்குள்ள ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமரந்து இருந்தது. மேலும் வீட்டின் காம்பவுன்ட் சுவரில் இருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை தப்பி சென்றது.

இதன் பின்னர் மட்டப்பரை பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் சிறுத்தை நுழைந்தது. நான்கு ஆடுகளை சிறுத்தை கடித்த நிலையில், 3 ஆடுகள் உயிரிழந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, காந்திநகர் மற்றும் மட்டப்பரை ஆகிய இடங்களில் மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் காந்தி நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. இதனால், மதுக்கரை மக்கள் நிம்மதியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, சிறுத்தையை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின்னர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட சிறுத்தை மகிழ்ச்சியுடன் தாவி ஓடிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0