மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல் : இரண்டு பேர் கைது!!

Author: Udayachandran
3 October 2020, 2:41 pm
Gutka Seized - updatenews360
Quick Share

மதுரை : ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த பார்சலை சோதித்த போது 5 டன் குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர்.

மதுரை மாநகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் அதிகளவில் விற்பனையாவதாக மதுரை மாநகர காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அனைத்துப்பகுதிகளிலும் தீவிர சோதனை செய்ய காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் உத்தரவிட்டார்

அதன் பேரில், திலகர் திடல் காவல்துறையினர் பெரியார் நிலையம் அருகே உள்ள ரயில் நிலையம் பார்சல் சர்வீஸ் லாரியை சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட 5 டன் மதிப்பிலான 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரி மற்றும் குட்கா பறிமுதல் செய்து லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்

குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கார்த்திக் தீபக், என தெரியவந்தது தலைமறைவாகி விட்டால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதோடு தென் மாவட்டங்களுக்கு லாரி சர்வீஸ் மூலம் குட்கா புகையிலை பொருட்களை அனுப்பியதாக இருபான் லாரி சர்வீஸ் மற்றும் செல்வி லாரி சர்வீஸ் ஊழியர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மேலஅனுப்பானடியை சேர்ந்த துரைப்பாண்டியன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மட்டும் லாரி இணை காவல்துறை இணை ஆணையர் சிவபிரசாத் நேரில் பார்வையிட்டு சென்றார்.மதுரையில் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 45

0

0