கல்லூரி முன்பு தீக்குளித்த இளைஞர்… நடுரோட்டில் துடிதுடித்து கரிக்கட்டையாக விழுந்த சம்பவம் ; மதுரையில் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 2:03 pm

மதுரையில் நடுரோட்டில் வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. தற்போது பெட்ரோல் நிரப்பிய கேனுடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

இதனால், உடையில் தீ பற்றி எரிந்த நிலையில் அலறியபடி துடிதுடித்து கரிக்கட்டையாக ரோட்டில் விழுந்தார். இதனால், அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயில் கருகிய வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்த வாலிபர் யார் எதற்காக தீக்குளித்தார்.

அவர் கல்லூரி முன்பாக தீக்குளித்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?