அமமுக நிர்வாகியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் : திடீர் ஐடி ரெய்டில் சிக்கியது… தேர்தல் நேரத்தில் தினகரனுக்கு தலைவலி…!!

3 March 2021, 6:28 pm
Madurai ammk IT raid - updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் அமமுக மாநில நிர்வாகியின் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறைக்கு வந்த தகவலையடுத்து, மதுரையை சேர்ந்த தொழிலதிபர் வெற்றிக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஐரவாதநல்லுரில் உள்ள கட்டுமான நிறுவனம், வில்லாபுரத்தில் உள்ள திரையரங்கு, கூடல்நகரில் உள்ள அலுவலகம் மற்றும் பாண்டிகோவிலில் உள்ள வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் பிற்பகல் முதல் வருமான வரித்துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழுவினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சோதனை 2வது நாளாக நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வருமானவரித்துறை சோதனையை அடுத்து அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றார்கள். தொழிலதிபர் வெற்றி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரனின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0