நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு.! சைக்கிள் திருடனுக்கு போலீஸ் வலை.!!
3 August 2020, 5:26 pmமதுரை : தெற்குவாசல் பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து சைக்கிளில் வந்தவர் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பந்தடியை சேர்ந்த 61 வயதான மூதாட்டி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை சைக்கிளில் வந்தவர் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் மூதாட்டி கொள்ளையனிடம் போராடியதால் அவர் முக்கால் பவுன் நகையுடன் தப்பி ஓடினார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொரோனா அடைப்பு காரணமாக பலரும் வருமானம் இன்றி இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெற வாய்ப்பு உள்ளதால் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் நகைகளை அணிந்து வெளியே செல்வது பாதுகாப்பானதாக இருக்காது எனவே நகைகள் அணிந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.