மதுரை மாநாடு பேனரை அகற்றியதால் ஆத்திரம்… அதிமுகவினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 12:53 pm

விழுப்புரத்தில் அதிமுகவினர் பேனரை காவல்துறையினர் அகற்றியதால் அதிமுகவினர் மறியல் போராட்டம். அதிமுகவுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் பதற்றம்.

அதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். பி. சி. வி.சண்முகம் ஆணைக்கிணங்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன.

அதில் ஒரு பகுதியாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரை மேற்கு காவல் துறையினர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாக கூறி அகற்றினர்.

இதனை அடுத்து அதிமுகவினர் விளக்கம் கேட்டு நான்கு முனை சந்திப்பில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை விழுப்புரம் மற்றும் புதுச்சேரி செல்லும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்பொழுது அங்கு பேச்சுவார்த்தை செய்ய வந்த விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் அதிமுக நகர செயலாளர் பசுபதிக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

உடனே டி.எஸ்.பி சுரேஷிடம் அதிமுகவினர் கிட்டே சென்று கூச்சலிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டன பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக் கொள்ளுங்கள் என காவல்துறை கூறியதை அடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!