12 ஆயிரத்தை கடந்தது மதுரையின் கொரோனா தொற்று எண்ணிக்கை…! தீவிரமடையும் பரிசோதனை
10 August 2020, 10:00 amமதுரை: மதுரையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,000ஐ கடந்து அதிர்ச்சி தருகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிப்போடு பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது.
ஆனாலும் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து அண்மை காலமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந் நிலையில் மதுரையில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. ஆகையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,005 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகமாகி வருகிறது. கன்னியாகுமரியில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,717 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டையில் மேலும் 136 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3,325 ஆக அதிகரித்துள்ளது.
வேலூரில் மேலும் 201 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆகையால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,691 ஆக உயர்ந்துள்ளது.