விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்த மதுரை வாலிபர்

3 December 2019, 10:52 am
Nasa updatenews360
Quick Share

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை மதுரை வாலிபர் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த ஜுலை 22-ம் தேதி நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அதில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த செப்., 7-ம் தேதி தரையிறக்கப்பட்டது. ஆனால், 99 சதவீதம் பணிகள் வெற்றியடைந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோ மற்றும் நாசா ஆகியவை ஈடுபட்டது. மேலும், விக்ரம் லேண்டர் இருந்த புகைப்படங்களை நாசா அண்மையில் வெளியிட்டது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கிய இடத்தில் காணப்பட்ட சிதறல்கள் மற்றும் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பவர் கண்டுபிடித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வரும் இவர், நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்துள்ளார். அதில், விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

Madurai engineer - updatenews360

1 thought on “விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்த மதுரை வாலிபர்

Comments are closed.