முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு.. மதுரையில் பரபரப்பு.. தற்கொலையா என போலீசார் விசாரணை…!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 12:53 pm

மதுரை அருகே முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் விதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன். இவர் 23 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், தனியார் வங்கியில் 20 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால், துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக இன்று காலை தனது வீட்டு மொட்டை மாடியில் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக கைப்பற்று வயிற்று பகுதியில் சுட்டுக் கொண்டார்.

இதை அறிந்த குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதனால் சம்பவம் நடந்த கரிமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா…? என்பது குறித்து கரிமேடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?