புடவை கட்டிட்டு வந்தா …….. ஏறுதா? பாலியல் தொந்தரவு கொடுத்த உயரதிகாரியை வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்!!

28 September 2020, 5:15 pm
Madurai Harassment- updatenews360
Quick Share

மதுரை : பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், பொய் வழக்கை திரும்ப பெற கோரி இளம்பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்ககூடிய சங்கீதா என்ற இளம்பெண் தனது தோழியுடன் திருப்பூர் பல்லடம் பகுதியில் உள்ள ஜே.ஜே.கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில் கணிணி பிரிவில் புணிபுரிந்துவந்த நிலையில் நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் என்பவர் சங்கீதாவிடன் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார்.

மேலும் சங்கீதாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி தான் கூறும் இடத்திற்கு தனியாக வர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சங்கீதா தனது தோழியுடன் பல்லடம் அருகே பச்சான்காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சந்தித்துள்ளனர்.

அப்போது சங்கீதாவிடம் சிவகுமார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றபோது சங்கீதாவும் அவரது தோழியும் பாதுகாப்பிற்காக எடுத்துசென்ற பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடியை தூவி அவரை கயிறால் கட்டிபோட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து பல்லடம் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் அளித்துள்ளனர். இதேபோல் சிவகுமார் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கீதா மற்றும் அவரது தோழி மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டபோது சங்கீதாவின் தோழிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தவும், நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்லடம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட செல்லும்போது மேலாளர் சிவகுமாரின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டல் விடுத்து தடுப்பதாகவும், மேலும் தன் மீதான வழக்கு காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கு என்பதால் அதனை திரும்ப பெற கோரியும் பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

பல்லடம் காவல்துறையினர் சிவகுமார் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் மீது பொய் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்ததற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் மத ரீதியாக மிரட்டல் விடுத்து முதல்தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற வைத்ததாக பாதிப்பட்ட பெண் சங்கீதா தெரிவித்தார்.