சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறு : ஒருவர் கத்தியால் குத்திக் கொலை… குற்றவாளிகள் தலைமறைவு

6 May 2021, 12:48 pm
killed - updatenews360
Quick Share

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் அருகே சோளங் குருணி கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி என்பவரது மகன் வீரணன் (35). இவர் தற்போது பரமக்குடியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் சோளங்குருணி வந்த அவர், சோளங்குருணி பிள்ளையார்பட்டி களத்துமேடு பகுதியில் நெடுங்குளத்தை சேர்ந்தவர்களுடன் பணத்திற்காக சீட்டு விளையாடியுள்ளனர்.

இதற்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில், வீரணனை கத்தியால் குத்தி விட்டு மற்றவர்கள் தலைமறைவாகினர். அருகிலிருந்தவர்கள் முதலுதவி செய்து வீரணனை வலையங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு வீரணன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பெருங்குடி காவல்துறையினர், வீரணன் உடலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 275

0

0