காதலால் தற்கொலைகள் அதிகரிப்பதால் காதலை தடை செய்ய முடியுமா?ஆன்லைன் கல்விக்கு ஆதரவாக ஹெச்.ராஜா கேள்வி!!
4 September 2020, 6:06 pmமதுரை : ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை கருப்பாயூரணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியபோது :
திருப்பதி கோவில் சொத்துகள் குறித்த தணிக்கைக்கு நீதிமன்றம் தீர்ப்பையடுத்து ஆந்திரா இந்து அறநிலையத்துறை ஒத்துகொண்டுள்ளனர். இதேபோல் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் 10லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோவில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும், என்று கூறினார்.
பைகளில் இலவச பொருட்களை வாங்கியவர்கள், மோடியால் மூட்டையில் வாங்கி செல்வதாக மக்கள் கூறுகின்றனர். மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி நிச்சயம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு நடத்திய காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் முடிவால் தான் காவிரியில் நீர் ஓடுகிறது என்றார்.
மழையால் அல்ல எனவும், லடாக்கில் சீனாவோடு யுத்த சூழல் நிலவும் நிலையிலும் கூட மக்களுக்கு மோடி அரசு உதவி வருகிறது எனவும், சீன நாடு உலகத்தின் அழிவாக உருவாகியுள்ளது என்றார்.
ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், ரஜினி ஆளுமையான ஆள் என்பதால் அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்துகூற முடியாது என தெரிவித்தார்.
0
0