நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது புகார் : மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர்கள் மனு!!

14 September 2020, 3:20 pm
Case Filed - updatenews360
Quick Share

மதுரை : நீதிமன்ற மாண்பை அவமதித்தாக கூறி நடிகர் சூர்யா மீது மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்ற மாண்பிற்கு எதிராக வார்த்தைகளை குறிப்பிட்டதாக கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தலைமையில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

வீண் விளம்பரத்திற்காக சூர்யா இது போன்ற நீதிமன்றங்களை விமர்சித்து வருவதாக வழக்கறிஞர் முத்துக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 0

0

0