மதுரை ஆதினத்தின் உயிருக்கு அச்சுறுத்தல்… பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் குழு மனு

Author: Babu Lakshmanan
5 May 2022, 4:00 pm

மதுரை : மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மதுரை வழக்கறிஞர்கள் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகர காவல் ஆணையரிடன் மனு அளிக்கப்பட்டது.

தருமபுர ஆதீனம் பட்டின பிரவேச விவகாரம் குறித்து மதுரை ஆதீனம் பேசிய கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

இந்நிலையில், மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மதுரை வழக்கறிஞர்கள் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் மதுரை மாநகர காவல் ஆணையரிடன் மனு அளித்தனர்.

மதுரை ஆதீனத்தின் கருத்தால் இந்து விரோத சக்திகளால் ஆதினத்துக்கு நிகழும் சூழல் உருவாகி உள்ளதாகவும், குத்தகைதாரர்கள் ஆதீனத்துக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், மதுரை ஆதீன மடம் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவம் கூறி மதுரை ஆதினத்துக்கும், மடத்திற்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?