முழு ஊரடங்கை மீறும் இளைஞர்கள்.! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

18 August 2020, 2:21 pm
Madurai Football in Lockdown - Updatenews360
Quick Share

மதுரை : ஊரடங்கு மீறி வைகையாற்றில் கால்பந்து விளையாடும் இளைஞர்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக மக்கள் ஞாயிற்று கிழமைகளில் அதிகம் கூடுவதால் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சிம்மக்கல் பகுதியில் இருக்கக்கூடிய வைகை ஆற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி முகககவசம் அணியாமல் அலட்சியப் போக்குடன் ஆற்றின் மையப்பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று பரவும் என தெரிந்தும் வாலிபர்கள் விளையாடி வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறையினரும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 31

0

0