பத்திரப்பதிவு துறையில் மோசடி.. 3 ஆண்டு வரை சிறை தண்டனை : அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
11 September 2021, 11:43 am
moorthi - updatenews360
Quick Share

மதுரை : பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டவரைவு விரைவில் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறைஅமைச்சர் மூர்த்தி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டு வரப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் சட்ட வரைவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. முறைக்கேடு தொடர்பாக விசாரணை உயர்நிலைக்குழு அமைக்கப்பட உள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பத்திரப்பதிவு மேலும் எளிமையாக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Views: - 220

0

0