குமரி கண்டம் குறித்து ஆய்வு தேவை, மதுரையை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 2:22 pm
Pon RadhaKrishnan -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையை தமிழகத்தின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்  பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை. இன்னும் நமது தொன்மை கண்டுபிடிக்க வேண்டும். இதே போல் குமரி கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் அப்போது தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையை தமிழகத்தின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வ. உ .சி சிலை மற்றும் மணிமண்டபம் குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்க தக்கது. புதிய கவர்னருக்கு வாழ்த்துக்கள் தமிழகம் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியேற்போம் என கூறினார்.

Views: - 360

0

0